பொரளையில் துப்பாக்கிச்சூடு - போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
பொரளை – வனாத்தமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றின் போது துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
காரொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று(30.08.2023) பிற்பகல் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் அவருடன் காரில் இருந்த மற்றுமொரு நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும், அதனையடுத்து பொலிஸார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் காரில் தப்பிச்சென்றுள்ளதுடன்,பேலியகொடை - பராக்கிரம மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
