புலோப்பளை கிழக்கில் தீக்கிரையான வீடு - சொத்துக்கள் சேதம்
கிளிநொச்சி - புலோப்பளை கிழக்கில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டிலிருந்த சொத்துக்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு எரிந்துகொண்டிருந்த சமயம் பளை பொலிஸார் வீட்டினை உடைத்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
மின் ஒழுக்கு குறித்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
