வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(30) இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெய்யினை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலினை பயன்படுத்தியமையாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பகுதியினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி சாமி அறைக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலையே மாறி தேங்காய் எண்ணெய் என நினைத்து பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
