மட்டக்களப்பில் கடையொன்றின் மீது தீப்பரவல்
மட்டக்களப்பு-காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று(20.6.2026) மதியம் கடையொன்றின் மீது ஏற்பட்ட தீப் பரவினால் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த கடை உரிமையாளர் மதியம் சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இப்றாகீம் என்பவருக்கு சொந்தமான இந்த புடவைக் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விசாரணைகள்
இதன் போது காத்தான்குடி நகர சபை தீ அணைக்கும் வாகனம் மட்டக்களப்பு மாநகர சபை தீ அணைக்கும் வாகனம் ஸ்தளத்துக்கு விரைந்து காத்தான்குடி பொலிஸார் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் காத்தான்குடி பொது மக்கள் இளைஞர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு ஏனைய கடைகள் வீடுகளுக்கு பரவாமல் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த இடத்துக்கு வேகமாக விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அலவக்கோன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் தீ அணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.