வரி நிலுவைகள் வசூலித்தல் தொடர்பில் நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ள தீர்மானம்
இலங்கையின் நிதியமைச்சகம் வரி நிலுவைகளை வசூலிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்வைக்கவுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்கள் அரசின் வருவாய் ஆண்டு இறுதிக்குள் 529 பில்லியனால் குறையும் என்று காட்டியுள்ள நிலையிலேயே இந்த செயல் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
நாட்டின் வரி வசூல் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிருப்திகளுக்கு மத்தியில், ஒரு நடவடிக்கைக் குழு, வருவாய் சேகரிப்பை விரைவுபடுத்தும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்
இதன்படி, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்வது மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளும் இந்த செயற்பாடுகளில் அடங்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வருவாயை வசூலிக்கும் உத்தேச நடவடிக்கைக் குழுவில் தொழிற்சங்கப்
பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
