சஜித் கட்சிக்குள் கடும் மோதல்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க ஆகியோர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சஜித் கட்சிக்குள் மோதல்
மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய டலஸ் அழகப்பெருமவை தேசியப்பட்டியலில் இணைத்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தவறிய சுஜீவ சேனசிங்கவும் தேசியப் பட்டியலில் சேர்ந்தமை கட்சிக்குள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.
தேசிய பட்டியல்
தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமையே இந்த முறுகல் நிலைமைக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
