யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட நிறைவு விழா
யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட நிறைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுகள் இன்று (29.05.2024) யாழ். போதனா வைத்தியசாலையில் றடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன்பத்திரன, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பணிப்பாளர் உரை
இதன்போது, உரையாற்றிய யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தற்போது யாழ்ப்பாண போதன வைத்தியசாலையானது தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வைத்தியசாலை தொடர்பில் பல்வேறுபட்ட குற்றசாசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலையை கோயிலைப் போல் பயன்படுத்த வேண்டும். இவை பொது மக்களுக்கு சேவை வழங்கும் ஓர் இடமென்பதை அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |