கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் படகு சேவை ஆரம்பம்
திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றினை கடப்பதற்கு இலங்கை கடற்படையினரினால் இலவச படகு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக இன்று (25) கடற்படையின் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது.
குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணி நடைபெற்று வரும் நிலையில் அவ் ஆற்றினை கடந்து செல்வதற்காகக் கிண்ணியா நகரசபையினால் தனியார் ஒருவருக்கு இழுவை படகு மூலம் கட்டணம் செலுத்தி படகு சேவை நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் அவ் இழுவை படகு நேற்று முன்தினம் பாடசாலை மாணவர்கள் உட்படப் பலருடன் பயணித்த நிலையில், விபத்திக்குள்ளாகி பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை கடற்படையின் படகு சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட படகில் ஆகக்கூடிய தொகையாக 25 பேர் வரை பயணிக்க முடியும் எனவும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் தனித்தனியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படகு சேவை இன்றையதினம் திருகோணமலை கடற்படையினரினால்
மேற்பார்வையிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.




தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 10 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam