FedEx நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராஜ் சுப்ரமணியம் நியமனம்!
FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
54 வயதான ராஜ் சுப்ரமணியம், 1991ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் இணைந்துகொண்டார். மேலும் நிறுவனத்தின் இயக்குநராகவும் செயற்பட்டுள்ளார்.
FedEx இல் 27 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ராஜ் சுப்ரமணியம், நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளை வகித்துள்ளார்.
FedEx நிறுவனத்தின் நிறுவுனர் 77 வயதான ஸ்மித், நிலைத்தன்மை, புதுமை, பொதுக் கொள்கை மற்றும் பிற உலகளாவிய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் செயல் தலைவர் பதவிக்கு மாறுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள யு.எஸ். மரைன் கார்ப்ஸில் அதிகாரியாகப் பணியாற்றிய ஸ்மித், 1973ல் அதிகாரப்பூர்வமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸை 389 குழு உறுப்பினர்கள் மற்றும் 14 சிறிய விமானங்களுடன் தொடங்கினார்.
FedEx நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 600,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening