தாய் வெளிநாட்டில் - தந்தையால் மகளுக்கு நேர்ந்த கதி
மொனராகலையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தந்தையின் அச்சுறுத்தலுக்கு மகள் உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், தந்தையின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கொடூரமான செயற்பாடு
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 38 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தந்தை மற்றும் சகோதரனுடன் குறித்த சிறுமி வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையின் கொடூரமான செயற்பாடு காரணமாக சிறுமியின் உடல் உறுப்புக்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.