சூதாட்டத்தில் மகளை ஈடு வைத்த தந்தை - தென்னிலங்கையில் நடந்த மோசமான செயல்
தென்னிலங்கையில் சூதாட்டத்தின் போது பெற்ற மகளை ஈடு வைத்த தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துக்கம பிரதேசத்தில் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், 16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் ஒப்படைத்த தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான தந்தை இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் சிறுமிக்கு 15 வயதாக இருந்த போது, தனது தந்தை மூலம் சூதாட்டத்திற்கு பணம் வழங்கியவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அதனை சிறுமியின் தாய் கண்டுபிடித்த நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சிறுமியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைவாக, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 31 வயதான அவரது உறவினர் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளர்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri