கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி
புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம்
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.

இதனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் துஸ்மந்த ரோஹண என்ற மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயது பாடசாலை மாணவனும் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் கந்தக்குளிய குடாவ புனித செபஸ்தியார் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.