இலங்கையில் துரித உணவுகளின் விலை அதிகரிப்பு! மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில், துரித உணவுகள் மற்றும் இனிப்பு பானங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்களின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கம்
துரித உணவு சாப்பிடாமல் இருப்பது, இனிப்பு பானங்கள் பயன்படுத்துவதை குறைப்பது, குறுகிய பயணத்திற்கு வாடகை வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற செயல்கள் மக்களின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளுக்கு துரித உணவுகளை வழங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கீரைகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு
நாடு முழுவதும் 105 கிராமிய சேவை அலுவலர் பிரிவுகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு திறம்பட பங்களிக்கும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற நோய்கள் வெகுவாக குறைந்துள்ளதையும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri