கனமழையால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள் !
தம்பலகாமத்தில் பெரும் போக நெற்செய்கைக்காக வயல் நிலங்களைத் தயார்படுத்தும் நிலையில் கனமழையால் வயல்நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும் போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயிகள் தமது வயல் நிலங்களைச் சமப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகின்றனர்.
இயந்திரம் மூலமாகவும் மனிதவளங்களை கொண்டும் நிலங்களை சமப்படுத்தி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.
கனமழை
பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள், உரிய காலத்தில் நெற்செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பெய்த கனமழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டும் காணப்படுகிறது.
தம்பலகாமம் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதுடன், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் நெற்செய்கை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம் News Lankasri
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan