வெள்ளத்தில் சிக்குண்ட விவசாயி ஒருவர் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு
மட்டக்களப்பு (Batticaloa) புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்று வெள்ளத்தில் சிக்குண்ட 7 விவசாயிகளில் ஒரு விவசாயியை விமானப்படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த மீட்புப் பணியானது இன்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு கடந்த திங்கட்கிழமை (25) புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்திஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.
மீட்கும் நடவடிக்கை
இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.
இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையினை இன்று விமானப்படையினர் முன்னெடுத்த போது மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை உலங்கு வானூர்தி மூலம் மீட்டெடுத்துள்ளனர்.
பொலிஸாரால் மீட்பு
இதேவேளை, கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்கு உலங்கு வானூர்தியிலிருந்து கயிறு இறக்கப்பட்டபோதும் அவர்கள் கயிறில் ஏறும் பயத்தினால் ஏற மறுத்துள்ளதால் அவர்களை மீட்கமுடியாமல் போயுள்ளது.
மேலும், புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியதுடன் ஏனைய இருவரையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
