நெல்லிற்கான நிர்ணய விலையை உறுதிப்படுத்த வேண்டும்: உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்(Video)
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம்(28.06.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நெல் விலையினை அரசாங்கம் தீர்மானித்து அதனை உறுதிப்படுத்துமாறும், நெல் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நட்டம்
நெல் கொள்வனவில் உரிய விலைகள் நிர்மாணிக்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ச்சியாக நட்டத்தினை எதிர்கொண்டுவருவதாகவும் ஒரு கிலோ நெல்லுக்கு 120ரூபா தீர்மானிக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அரசாங்கம் 120ரூபா வீதம் நெல் கொள்வனவினை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் எனவும் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டன.
இதுமட்டுமன்றி விவசாய அமைச்சருக்கு எதிரான பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan