இலங்கைக்கு வரும் பிரபல இந்திய நடிகர்
பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகளின் ஆதரவு

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலாத் தூதுவர் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய ஆகியோரும் அவரைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் மம்முட்டி தற்போது இந்தியத் திரையுலகில் 5 தசாப்தங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதுடன் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
    
     
    
     
    
     
    
     
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        