பேருந்திலிருந்து குடும்பம் ஒன்றை நடு வீதியில் இறக்கிவிட்ட அவலம்! தமிழகத்தில் நடந்த மற்றொரு சம்பவம்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் இருந்து 3 பேரை கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பேருந்து புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே, பேருந்தை நிறுத்திய நடத்துநர், கணவன், மனைவி, மற்றும் குழந்தைகளைப் பேருந்தில் இருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அவர்களின் துணி மற்றும் உடமைகளைப் பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குமரியில் நாற்றம் அடிப்பதாகக் கூறி மீனவப் பெண்ணைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் ஒன்றும் அண்மையில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
