யாழில் வெற்றுக் காணியிலிருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்
இளவாலை - வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் வெற்றுக் காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் அவரது குடும்பத்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை பிரிந்து வந்து இளவாலை - வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அதிக மதுபாவனை
இந்நிலையில் அவர் நேற்றையதினம், அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுபாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
