போலி கல்விச் சீர்திருத்த ஆவணம்: பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பரவி வரும் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உத்தேச வரைவு ஆவணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்தப் போலி ஆவணம் குறித்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, "2026 கல்விச் சீர்திருத்த முன்மொழிவு எனப் பகிரப்படும் இந்த வரைவு ஆவணம், அமைச்சினால் அல்லது அதன் எந்தவொரு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போலியான இந்த ஆவணத்தைத் தயாரித்து, பரப்பியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பரவி வரும், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உத்தேச வரைவு ஆவணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த போலி ஆவணம் குறித்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, "2026 கல்விச் சீர்திருத்த முன்மொழிவு எனப் பகிரப்படும் இந்த வரைவு ஆவணம், அமைச்சினால் அல்லது அதன் எந்தவொரு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போலியான இந்த ஆவணத்தைத் தயாரித்து, பரப்பியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



