கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்: வேலு குமார்

Kandy Government Of Sri Lanka Sri Lankan Peoples M. Velu Kumar
By Kanamirtha May 24, 2022 06:51 AM GMT
Report

நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் தோல்வி இன்று முழுமொத்தமாக வெளிப்படுகின்றது. இலங்கையின் அரசியலில் பெரும்பான்மை சார்ந்த தேசிய கட்சிகள் பிரதான இடம் வகித்து வந்துள்ளன.

அதேபோன்று, இனங்கள் சார்ந்ததாகவும், பிராந்தியங்கள் சார்ந்ததாகவும், சிறுபான்மை கட்சிகள் உருவாகி இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக பல சிறு கட்சிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றன.

இன்றைய நாட்டின் நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும். நாட்டிற்கென தேசிய கொள்கை திட்டம் ஒன்றை வகுத்து, அதற்கமைய தூர நோக்குடன் எச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்: வேலு குமார் | Failure Party Dominated Politics Present Country

நாட்டிற்கென தேசிய கொள்கை ஒன்று இருக்கின்றதா? என கேட்டால், இல்லை என்பதே உண்மையாகும். மாறாக அரசியல் கட்சிகள் தமக்கென கொள்கைகளை வகுத்து கொண்டு, அவற்றையே முன்னிலைப்படுத்திச் செயற்பட்டனர். காலத்திற்குக் காலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுகின்ற போது, கொள்கையும், செயற்பாடுகளும் மாற்றமடைந்தது.

அது மட்டுமல்லாது, ஆட்சியமைப்பதற்காக கூட்டுச்சேரும் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்பவும், விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், கொள்கைகள், செயற்பாடுகள் மாற்றம் அடைந்தன.

இவையனைத்தும் எமது நாட்டுக்கென நிலையான ஒரு கொள்கை வேலைத்திட்டம் இருக்கவில்லை என்பதையே மீண்டும் காட்டுகின்றது.

கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவாகும் உறுப்பினர்களுக்கு, நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்திச் செயற்படுவதற்குரிய இடமளிக்கப்படவில்லை.

மாறாக கட்சி கொள்கைக்குக் கட்டுப்பட்டு, கட்சி முன்னெடுக்கும் செயற்பாட்டை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டனர்.

கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்: வேலு குமார் | Failure Party Dominated Politics Present Country

அதனையும் தாண்டி சிலர் தமது சுயநல தேவைகளை மையப்படுத்தியே செயற்பட்டனர். இன்று நாடு மீள முடியாத பிரச்சினைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறான சூழலிலும், கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதே பிரதானமாக நடைபெறுகின்றது.

கட்சித் தலைவர்களிடையில் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது, தமது கட்சியின் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வது என இந்நிலைமை தொடருகின்றது.

இந்நிலைமை மாறி, மக்கள் பிரதிநிதிகள் மக்களையும், நாட்டையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது.

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று செயற்பட்டாலே இன்று நாம் விழுந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து மீள எழமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US