வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விரைவில் மருத்துவ பீடம்: துணைவேந்தர் அறிவிப்பு

Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Shan Aug 01, 2022 10:34 PM GMT
Report

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வளாகமாக இருந்த எமது நிறுவனம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்ததப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் கடந்துள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்திட்டங்கள்

இந்த காலப்பகுதியில் பல்வேறுபட்ட சவால்களிற்கு மத்தியில் பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அந்த வகையில் நல்லிணக்க மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அத்துடன் சர்வதேசத்தினை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து கற்கை நெறிகளை பயில்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

விசேட தேவைக்குட்டவர்களிற்கான அலகு ஒன்றை ஆரம்பித்து அவ்வாறாக சமூகத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அனுசரணை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம்.

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விரைவில் மருத்துவ பீடம்: துணைவேந்தர் அறிவிப்பு | Faculty Medicine Coming Vavuniya University

எமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அறியும் பொருட்டு கலாசார நூதனசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை எமது மூதவையும் பேரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது அதற்கான திட்டமுன்மொழிவினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளோம்.

இதன் மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையையும் ஒரு போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் எமது திட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டதுடன் அதன் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும். குறிப்பாக எதிர்வரும் சில வருடங்களுக்குள் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை சூழலியல் பீடம் ஒன்றினை உருவாக்குவதற்கும் எமது மூதவையும் பேரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் வங்கியியல் காப்புறுதி தொடர்பான புதிய கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழு எமக்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த கற்கைநெறிக்கு க.பொ.த உயர்தரத்தில் கடந்த வருடத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மானுடவியல் சமூகவியல் என்ற பீடத்தை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும் அது விரைவில் ஆரம்பிக்கப்படும்.

சர்வதேச மாநாடு 

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விரைவில் மருத்துவ பீடம்: துணைவேந்தர் அறிவிப்பு | Faculty Medicine Coming Vavuniya University

நல்லிணக்க மையம் ஒன்றின் ஊடாக பெண்கள் அரசியலில் ஈடுபடும் வகையில் அதனை வலுவூட்டுவதற்கான சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த மையத்தின் ஊடாக ஊடகத்துறையில் சான்றிதழ் கற்கை நெறியினை வழங்குவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. அவையும் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

கடந்த ஒருவருடத்தில் சர்வதேச மாநாடு ஒன்றை எமது பல்கலைகழகம் நடாத்தியுள்ளது. அத்துடன் எமது பீடங்கள் பல்வேறுபட்ட தொழில்சார் கற்கை நிறுவனங்களுடனும், சமூக அடிப்படையிலான நிறுவனங்களுடனும் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கும் பல்கலைகழகத்திற்கும் இடையிலான ஒரு தொடர்பினையும் ஏற்ப்படுத்தியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடி நிலமையால் அரசாங்கம் சாதாரண செலவீனங்களை வழங்குவதற்கே உடன்பட்டுள்ளது. நிர்மாண துறைகளிற்கான நிதியினை தராத சூழ்நிலையில் அதனை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளூடாகவும், அரச தனியார் பங்குடமையின் ஊடாகவும் அதனை செய்வதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்வதற்காக மக்கள் நலன் தொடர்பான அலகு ஒன்றையும் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். உயர் கற்கைநெறிகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

பொருளாதார சிக்கல்கள் ஏனைய சவால்களினால் நாங்கள் திட்டமிட்டவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை அடையக்கூடியதாக உள்ளது. ஏனைய சவால்களையும் முறியடித்து ஏனைய திட்டமிடல்களையும் சிறப்பாக மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம் என கூறினார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US