வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி
எந்தவொரு வங்கி அட்டை மூலமும் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தை செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை செலுத்தாதது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது என்றும், அதற்கு தீர்வாக வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத்திடம் இரண்டாவது வாசிப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல்
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தனது அரசாங்கம் ஏற்கனவே சில வெற்றிகளைப் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், LankaPay - GovPay மூலம் தற்போது பில்லியன் கணக்கான ரூபாய்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |