பேஸ்புக் பயன்படுத்தும் இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்
இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்கு இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர், குறித்த பெண்ணிடம் காதலிக்குமாறு கேட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
ஆனால் அவர் மறுத்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுதாக மிரட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எந்தவிதமான கணினி அறிவும் இல்லை, ஆனால் மற்றவர்களின் சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அசாத்திய திறமை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
