மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானி
புதிய இணைப்பு
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார்.
விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில முலிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் 41 வயது விமானி என தெரியவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
Update - 06:47
விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 8 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri