தபால் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
தபால் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தக் காலப்பகுதியில் தபால் சேவை தொடர்பான பணிகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி உள்நாட்டு வெளிநாட்டு தபால்கள், பொதிகள் என்பனவற்றை ஏற்றுக் கொள்ளல், விநியோகம் செய்தல், உள்நாட்டு வெளிநாட்டு அதிவேக தபால் சேவை, மருந்துப் பொருள் விநியோகம், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.