எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் இழப்பீடு செலுத்த மறுப்பு
இலங்கை உச்சநீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் சிங்கப்பூர் கப்பல் ஒன்று தீப்பற்றி முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது.
குறித்த தீவிபத்தின் காரணமாக இலங்கைக் கடற்பரப்பை அண்டிய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
நிறுவனம் மறுப்பு
இதனைக் கருத்திற் கொண்டு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் குறித்த தீ விபத்தைத் தடுக்கத் தவறியமை காரணமாக எக்ஸ்பிரஸ் கப்பல் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும், குறித்த இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



