யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்மாதிரியான செயற்பாடு
சமூகத்தினையும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினையும் புத்தகத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் "புத்தக யாசகன் " செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமானது கைதடி பிரதேச சபை நூலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (19) கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் நிகழ்த்தப்பட்டது.
கிராமத்தில் உள்ள நூலகங்கள்
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தி. விக்னேஸ்வரன், கலைப்பீட மாணவர் ஒன்றியச் சிரேஷ்ட பொருளாளரும் சிரேஷ்ட விரிவரையாளருமாகிய கபிலன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், கலைப்பீட மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச்செயற்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்களும் தமிழ் தேசத்து உறவுகளும் தங்களின் மறக்க முடியாத நாட்களில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடாகப் புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுப்பதற்கு அன்பளிப்புச் செய்ய முடியும்.
மேலும் புத்தகங்களானது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள நூலகங்களிற்கும் சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |