நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: ஹாபிஸ் நஸீர் அஹமட்(Photo)

Srilanka Muslim Congress Sri Lanka Politician Sri Lankan political crisis
By Chandramathi Jun 04, 2022 10:42 AM GMT
Report

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

“நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்த பதவிக்கு வருபவர்களை பொறுத்தே, இதன் ஆழ அகலங்கள் அறியப்படுவதாக” முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: ஹாபிஸ் நஸீர் அஹமட்(Photo) | Executive Presidency Abolished Altogether

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிறைவேற்றதிகாரம் மக்களுக்கான உச்ச பாதுகாப்பளிக்கிறது. கடந்தகாலங்களில் அனுபவிக்க நேர்ந்தவைகள் சிலவற்றால், இப்பதவியை ஒழிக்க வேண்டுமென்று கோஷங்கள் எழுந்துள்ளன. ஆனால் இப்பதவியை ஒழிக்க கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தெளிவான நிலைப்பாடும் இதுவே” என குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் தேவைப்பாடு

“மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் போது தான் எல்லோருக்குமான எங்கள் ஜனாதிபதி என்ற உரிமையிருக்கும். இலங்கையில் உள்ள அத்தனை பிரஜைகளும் வாக்களிப்பதால் ஜனாதிபதிக்கும் ஒரு கடப்பாடு ஏற்படுகின்றது.

மாறாக நாடாளுமன்றம் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதால் அவர், ஒரு மாவட்டத்துக்கு அல்லது பிரதேசத்துக்கு உரியவராகவே அர்த்தப்படும். அதுமட்டுமன்றி தேர்தலூடான தெரிவு வரும்போது தான் சமூகங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஜனாதிபதிக்கு ஏற்படும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: ஹாபிஸ் நஸீர் அஹமட்(Photo) | Executive Presidency Abolished Altogether

குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் கடமைப்பட்டவராகிறார். ஏதாவதொரு அவசர தேவைகளை அடைந்துக்கொள்ள ஜனாதிபதியுடனுள்ள உறவுகள் அல்லது புரிந்துணர்வுகள் வழிவகுக்கும்.

இவ்வாறு பல விடயங்கள் கடந்தகாலங்களில் பெறப்பட்டுள்ளன. தனியொருவரின் மனநிலைகளுக்காக இந்த அதிகாரத்தையே முற்றாக ஒழிக்குமாறு கோருவது அர்த்தமற்ற சிந்தனையாகும்.” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US