தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை இந்தியா நீக்க வேண்டும் - முன்னாள் போராளிகள் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என முன்னாள் போராளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புனர்வாழ்வுக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் குழு ஒன்று, இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் நெருங்கிய உறவைப் பேணும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில் இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்றிருந்தது.
இந்த நிகழ்வில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதன்போது ஜனநாயக போராளிகள் கட்சியினர், பல்;வேறு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடினர்.
படுகொலைக்கு காரணம்
இதன்போது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குமாறு இந்திய அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர்.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இலங்கை மீது கட்டாயப்படுத்தப்பட்ட 13வது
திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை மீண்டும் வலியுறுத்திய அந்த
கட்சியினர், இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள்
திணைக்களத்தினால் இந்து ஆலயங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்ற
குற்றச்சாட்டுகள் உட்பட வேறு சில விடயங்களையும் வெளிப்படுத்தினர்.