பாகிஸ்தானிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் கைது
பாகிஸ்தான் (Pakistan) உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் (ISI - Inter-Services Intelligence) முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந்த நாட்டு இராணுவம் கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவ சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்றுள்ள விசாரணை
இதனையடுத்து பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஃபைஸ் ஹமீதுவிடம் விசாரணையும் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர், ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார்.

இந்தநிலையில் ஓய்வுக்குப் பின்னர், பாகிஸ்தான் இராணுவ சட்டத்தை மீறும் வகையில் ஃபைஸ் ஹமீது பல செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
எனினும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் தரப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam