ரஷ்யாவை எச்சரித்த பிரபல ஐரோப்பிய நாடு
ரஷ்யா ஸ்வீடன், பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் போலாந்து அவர்களுக்கு உதவும் என்று அந்நாட்டு பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி தெரிவித்துள்ளார்.
அதாவது, நேட்டோ உறுப்புரிமையைப் பெறுவதற்கு முன்பு அவர்கள் தாக்கப்பட்டால், ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு போலந்து உதவும் என்று பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி தெரிவித்துள்ளார்.
சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவது ஐரோப்பாவில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக நான் கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து பின்லாந்து மற்றும் ஸ்வீடன் புதன்கிழமை நேட்டோ கூட்டணியில் சேர முறைப்படி விண்ணப்பித்துள்ள நிலையில் இவ்வாறு போலந்து அறிவித்துள்ளது.