அத்தியாவசியப் பொருட்கள் குறித்து சதொசவின் மற்றுமொரு அறிவிப்பு
லங்கா சதொசவில் ஒரு நபருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரிசி, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நேற்று முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்தது.
விநியோகத்தில் பிரச்சினை இல்லை
இந்தநிலையில், ஒருவருக்கு வழங்கும் அரிசி மற்றும் சீனியின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஒருவருக்கு வழங்கப்படும் 3 கிலோ அரிசியின் அளவு 5 கிலோவாகவும், சிவப்பு சீனி 2 கிலோவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் லங்கா சதொசவில் போதுமான பொருட்கள் இருப்பதாகவும் விநியோகத்தில் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.