மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள்
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை நிக்சன் ஆண்டகை தலைமையில் சிறப்பு குறித்தோலை ஞாயிறு வழிபாட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகவால் கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தின் இறுதி வார முக்கிய வழிபாடுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள் நேற்று (24.03.2024) சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உணர்வு பூர்வமாகமுன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் குறித்தோலை ஞாயிறு வழிபாட்டு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்தோலை ஞாயிறு
இதன்போது ஆலய வழிபாட்டுக்காக வந்த அடியார்களுக்கு ஆலயத்தின் பங்கு பிரிவினர்களால் குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குரிய குருதோலைகள் வழங்கப்பட்டு இயேசுவின் சிலுவை வடிவில் அமைக்கப்பட்டு அதன் பின்பு ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தவக்கால வழிபாடுகளை குறித்து ஆலய வளாகத்தில் ஊதா நிறத்திலான கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருந்தொகையான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் குருத்தோலை ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.











தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 8 நிமிடங்கள் முன்

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
