தமிழ் திரைப்படத்துறையினருக்கும் இலங்கைக்கும் இடையிலான பகை!:அன்று சிவாஜியும் மாலினியும்
இலங்கையின் பிரபல நடிகை, நடிகர்களை பயன்படுத்தி தமிழகத்தில் தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட காலம் ஒன்றும் இருந்தது. காமினி பொன்சேகா, மாலினி பொன்சேகா, கீதா குமாரசிங்க, விஜய குமாரதுங்க போன்ற இலங்கையின் பிரபல நடிகர்கள் தமிழகத்தின் தமிழ் நடிகர், நடிகைகளுடன் நடித்தனர்.
மாலினி பொன்சேகா தமிழகத்தில் மாத்திரமல்ல இந்தியா முழுவதும் அறிந்த நடிகரான இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பைலட் பிரேமநாத் திரைப்படம் இலங்கையில் மாத்திரமல்ல தமிழகத்திலும் பிரபலமானது.
காமினி பொன்சேகா தமிழ் திரைப்பட நடிகை ஸ்ரீ பிரியாவுடன் இணைந்து நீலக்கடலின் ஓரத்திலே என்ற திரைப்படத்தில் நடத்ததுடன் கீதா குமாரசிங்க, சிவாஜி கணேசனுடன் மோகன புன்னகை என்ற படத்தில் நடித்தார். அத்துடன் விஜய குமாரதுங்க, லட்சுமி, முத்துராமன் ஆகியோர் நடித்த நங்கூரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை தவிர நடிகர் ஜெய்சங்கர் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தில் நடித்ததுடன் அதில் கீதா குமாரசிங்கவும் நடித்திருந்தார்.
இவ்வாறு இருந்த தமிழகம் இலங்கையில் போர் ஆரம்பித்த பின்னர் மாற்றமடைந்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போர் முடிந்து இலங்கையில் இந்தியாவின் இந்தி திரைப்பட உலகின் ஐய்ஃபா சர்வதேச திரைப்பட விருது வழக்கும் விழாவை இலங்கையில் நடத்திய போது, அதில் கலந்துக்கொள்ள வேண்டாம் என தமிழக நடிகர்கள், பொலிவூட் நடிகர்களிடம் கூறினர்.
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் உட்பட முழு பச்சன் குடும்பமும் இலங்கையில் நடந்த இந்தி திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ளவிருந்தனர். இந்த விழாவை பகிஷ்கரிக்குமாறு இயக்குனர் மணிரத்னம் விடுத்த கோரிக்கை காரணமாக அமிதாப்பச்சன் உட்பட முழு குடும்பம் ஏற்றுக்கொண்டது.
இந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டர் சாருக்கான் விழாவை பகிஷ்கரித்தார். சாருக்கான் முதன் முதலில் இலங்கைக்கு வந்த போது, நடந்த குண்டு தாக்குதலே இதற்கு காரணம். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரை நிறுத்துமாறு கோரி தென்னிந்திய நடிகர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.
இதற்கு இலங்கை சாதகமான பதிலை வழங்கவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இலங்கை எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இலங்கை அரசு அவர்களை கோமாளிகள் என வர்ணித்தன் காரணமாக தமிழ் திரைத்துறையினரின் கோபம் மேலும் அதிகரித்தது. இது தமிழ் திரைப்பட துறையினர் மத்தியில் மாத்திரமல்ல, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு பரவி இருந்தது.
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனை தமிழ் மக்கள் நேசித்தாலும் அவர் ராஜபக்ச ஆதரவாளர் என தமிழகத்தின் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அண்மையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சித்தார்.
முத்தையா முரளிதனின் பாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியை தெரிவு செய்யப்பட்டார். முரளிதனின் பாத்திரத்தை ஏற்று நடிக்க விஜய் சேதுபதி விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனினும் தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள், அவரது தீர்மானத்தை எதிர்த்தனர். இறுதியில் விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.
எதிர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாது, படத்தின் இயக்குனரும் பாடத்தை பாதியில் கைவிட்டார். மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வடக்கு கிழக்கில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை திறந்து வைக்க, இலங்கைக்கு வருகை தர தயாராக இருந்தார்.
இதற்கு தமிழக திரைப்பட ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இறுதியில் ரஜினிகாந்த எதிர்ப்பு காரணமாக தனது இலங்கை விஜயத்தை கைவிட்டார். மாலினி பொன்சேகாவின் பைலட் பிரேம்நாத் திரைப்படத்திற்கு பின்னர், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் சிக்கலாக மாறியது.
இந்த சிக்கலுக்கு மத்தியிலும் இலங்கையின் பிரபல நடிகரான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ரஜினிகாந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எந்த எதிர்ப்பும் இன்றி தமிழகத்திற்கு சென்று ராஜினிகாந்தை சந்தித்து விட்டு திரும்பினார். ரஞ்சனின் விஜயத்திற்கு பின்னரும் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு முடிவுக்கு வரவில்லை.
தற்போது புதிய எதிர்ப்பு கிரிக்கெட் வீரர் மஹீஷ் திக்ஷனவுக்கு எதிராக கிளம்பியுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனை ஐ.பி.எல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. பெரும் தொகை பணத்தை செலுத்தி அந்த அணி அவரை ஏலத்தில் வாங்கியது.
எனினும் அவர் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர் எனக் கூறி, மஹீஷ் திக்ஷனவுக்கு எதிராக மாத்திரமல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலான இந்த எதிர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த பகை எப்போது முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
சாதாரணமாக உலக நாடுகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் பகையை அந்நாடுகளில் உள்ள கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
எனினும் இலங்கை மற்றும் தமிழகத்திற்கும் இடையிலான இந்த பகையானது விளையாட்டு மற்றும் திரைப்படம் ஊடாக தூண்டப்படுகிறது. இந்த பகையை தீர்த்து வைத்து தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் சமாதான தூதுவன் எப்போது வருவார் எனக் கூற தெரியவில்லை.
-மௌரட்ட

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
