மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்: இம்ரான் எம்.பி

Government Of Sri Lanka Imran Maharoof Sri Lanka Fuel Crisis
By Kanamirtha May 26, 2022 10:42 AM GMT
Report

எரிபொருள் விலையேற்றம் குறித்து பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 

“எரிபொருள் விலையை திடீரென பெருந்தொகையால் அதிகரித்த எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகம் மூலம் நட்டத்தினை அனுபவித்து வருகின்றமையால் பெரிய அதிகரிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்தளவு அதிக விலை அதிகரிக்கப்பட்ட போதும் இன்னும் சிறிது நட்டம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அனுபவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சரது இந்தக் கூற்றுப் பிழையானதாகும்.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்: இம்ரான் எம்.பி | Energy Minister To Deceive People Should Resign

ஐஓசி தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு 

மக்களை ஏமாற்றும் விடயமாகும். இலங்கையில் ஐஓசி தனியார் நிறுவனமும் எரிபொருள் விநியோகம் செய்கின்றது. இந்த நிறுவனத்திலும் இதேவிலைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.

எந்தவொரு தனியார் நிறுவனமும் நட்டத்திற்குப் பொருள் விற்பனை செய்வதில்லை. எனவே, ஐஓசி இந்த விற்பனை மூலம் இலாபம் பெறுகின்றது என்பதே அர்த்தமாகும். இந்த நிலையில் எப்படி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் நட்டம் ஏற்பட முடியும் என அமைச்சரைக் கேட்க விரும்புகின்றேன்.

தனியார் நிறுவனத்திற்கு இலாபம் ஏற்படும் அதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகின்றதென்றால் அங்கு பிழையான நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் அல்லது ஊழல் இடம்பெற வேண்டும்.

அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை 

இதனை கண்டு நிவர்த்தித்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் சிறிது விலையைக் குறைத்து பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய முடியும். இதன் மூலம் சுமைக்கு மேல் சுமையைச் சுமக்கும் பொதுமக்களுக்குச் சிறிது நிவாரணத்தை அளிக்க முடியும். இது தான் இன்றைய நிலையில் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகும்.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்: இம்ரான் எம்.பி | Energy Minister To Deceive People Should Resign

இதனை விடுத்து பிழையான நிர்வாகச் செயற்பாடுகளால் ஏற்படும் நட்டத்தை அல்லது ஊழல் மூலம் ஏற்படும் நட்டத்தைப் பொதுமக்கள் மீது சுமத்துவதற்கு ஒரு அமைச்சர் தேவையில்லை. எனவே, சரியான வெளிப்படைத் தன்மையான நிர்வாகம் செய்ய முடியாத, நாட்டு மக்களுக்குப் பிழையான தகவலை வெளியிடும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

இன்று இந்த நாட்டில் விலையேற்றம் செய்வதற்குத் தான் அமைச்சர்கள் உள்ளனர் என்ற கருத்து பொதுமக்களிடையே உள்ளது. அரசாங்கம் செய்யும் இந்த மோசமான செயற்பாடுகளே முழு பாராளுமன்றத்தையும் மக்கள் பிழையாக நோக்குவதற்குக் காரணமாகும்'' இவ்வாறு கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US