மின் கட்டணத்தை சேமிக்க பிரித்தானிய நிறுவனத்தின் புதுமையான யோசனைகள்!
குளிர்காலத்தில் எரிவாயு மற்றும் மின்சாரக்கட்டணங்கள் உயர்ந்து வருவதை தடுப்பதற்காக தாம் பரிந்துரைத்த யோசனைகள் தொடர்பில் பிரித்தானியாவின் மிகப்பெரிய எரிசக்தி, நிறுவனம் பாவனையாளர்களிடம் மன்னிப்பை கோரியுள்ளது.
குளிர்காலத்தில் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ள, செல்லப்பிராணிகளுடன் கட்டி அரவணைத்துக்கொள்ளுமாறும் குழந்தைகளை ஹூலா ஹூப் போட்டிகளில் ஈடுபடுத்துமாறும், சமைத்து முடித்த பின்னர் அடுப்பை திறந்து வைக்குமாறும் குறித்த நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.
மின்சார கட்டணங்களை சேமிப்பதற்கு என்ற அடிப்படையில் குறித்த நிறுவனம், 10 ஆலோசனைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை, பாவனையாளர்களுக்கு அனுப்பியிருந்தது.
இந்தநிலையில் இந்த பரிந்துரைகள், பாவனையாளர்கள் மீதான “தாக்குதல்” சம்பவத்தை போன்றது என்று பிரித்தானிய பொதுச்சபையின் நடவடிக்கைக்குழு உறுப்பினர் டரன் ஜோன்ஸ் விமர்சித்துள்ளார்
இதனையடுத்து தமது பரிந்துரையின் உள்ளடக்கம் மோசமானது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள OVO என்ற எரிசக்தி நிறுவனம், தமது பரிந்துரைக்காக நேர்மையாக மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam