ஆனையிறவு உப்பள ஊழியர்களின் தொடர் போராட்டம்
ஆனையிறவு உப்பள ஊழியர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும்(19) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக, பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும், தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த (14-05-2025) ஆனையிறவு உப்பளத்தின் முன்பாக முன்னெடுத்து இருந்தனர்.
இதனையடுத்து, குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இந்த போராட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சமத்துவ கட்சியினுடைய ஆதரவாளர்கள், பளைப் பிரதேச சபையினுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினுடைய பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
