மின்சார பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்த மறுக்கும் பௌத்த பிக்குகள்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பொருத்துவதற்காக, இந்தியக் கடன் திட்டத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு
USD 100 Million Credit Line extended by Gov of India for RoofTop Solar will be used to equip Schools, Universities, Edu institutes, Hospitals, District & Divisional Secretariat’s, Govt buildings & Religious institutes. Progress was reviewed with officials of Indian HC, SEA & CEB. pic.twitter.com/Zq8bT322ym
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 15, 2022
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் மின்சார கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
கொடுப்பனவுகளை செலுத்த மறுப்பு
இதனையடுத்து, சில பௌத்த பிக்குகள் மின்சார பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்தப்போவதில்லை என்று தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் மேற்கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை இந்திய கடன் வரியுடன் நிறுவ இணங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.