நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் குறித்து மின்சார சபை வெளியிட்ட தகவல்
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகளின் தற்போதைய நிலை குறித்த புதிய தகவல்களை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழக்கமான ‘B’ மட்ட பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த நவம்பர் 3ஆம் திகதி அன்று மின் உற்பத்தி நிலையத்தின் 2ஆம் இலக்க மின் பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மின் பிறப்பாக்கிகளின் திருத்தப் பணிகள்
உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்நுட்பக் குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் பராமரிப்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

திட்டமிட்ட சோதனைகளுக்குப் பிறகு, எதிர்வரும் ஜனவரி 18 அளவில் இந்த மின் பிறப்பாக்கியை மீண்டும் தேசிய மின் கட்டமைப்போடு இணைக்க மின்சார சபை தயாராகி வருகிறது.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையத்தின் 1ஆம் இலக்க மின் பிறப்பாக்கியில் கடந்த டிசம்பர் 20 அன்று எதிர்பாராத விதமாக கொதிகலன் (Boiler) செயலிழப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த மின் பிறப்பாக்கியும் தற்போது செயலிழந்துள்ளது. இதற்கான அவசர திருத்தப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, ஜனவரி 18, 2026 ஆம் திகதியளவில் அதனை மீண்டும் சீர்செய்து மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என மின்சார சபை எதிர்பார்க்கிறது.
இந்த இரண்டு மின் பிறப்பாக்கிகளின் திருத்தப் பணிகள் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என்றும், பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam