கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு! நீதிமன்றில் வழக்கு தாக்கல்

Srilanka Police Kilinochi
By Sudaron Jul 26, 2021 06:29 PM GMT
Report

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு பொதியொன்றை நுகர்வோர் பெற்றுச்சென்றுள்ளனர். குறித்த உணவுப் பொதியில் மின்கடத்திக்கூடு ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் மற்றம் சுகாதார பரிசோதகருக்கு நுகர்வோரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப்பொதியில் மின்கடத்திக்கூடு காணப்படுவது தொடர்பில் உணவக உரிமையாளரிடம் வினவியபோது,


அண்மையில் இலத்திரனியல் உபகரணம் ஒன்று திருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் காணப்பட்ட மின்கடத்திக்கூடு தவறுதலாக விழுத்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் வினவியபொழுது,தான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாகவும், இவ்விடயம் தொடர்பில் உணவக ஊழியர்களிடம் வினவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவு பொதியை பெற்றுக்கொண்ட நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் நுகர்வோர் வினவியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை மெற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் மற்றம் கரைச்சி பிரதேச சபையினரின் கவனத்திற்கு நுகர்வோரால் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன், குறித்த விடம் தொடர்பில் முறைப்பாட்டினையும் நுகர்வோரிடம் பெற்றுக்கொண்டனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பெற்றுக்கொண்ட சுகாதார பரிசோதகர் உணவகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது பிரிதொரு தினத்தில்கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் உணவக ஊழியர்களிடம் குறிப்பிடடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


GalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US