மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகாத நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்-பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றனர் எனவும் அந்த தேர்தல் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகாத நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என அந்த பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிரமங்கள் ஏற்பட்டால் மக்கள் தீர்மானங்களை எடுப்பதை தவிர்க்க முடியாது
பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் கிராமத்திற்கு பணிகளை செய்துள்ளதால், தேர்தல் ஒன்றின் போது மக்கள் மத்தியில் செல்ல எவ்வித அச்சமும் இல்லை.
தேர்தலுக்கு தயாராகும் போது மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு அல்லது உணவு தட்டுப்பாடு நிலவினால், மக்கள் அவை குறித்து கவனம் செலுத்தி தீர்மானங்களை எடுப்பதை தவிர்க்க முடியாது.
இதனால், தேர்தலுக்கு பொருத்தமான சூழலை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு ஊழியர்கள இணைத்துக்கொள்வது உட்பட இடைநிறுத்தப்பட்ட மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள பொது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதியிடம் தீர்வை கேட்டுள்ளோம்.
பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என கோரியுள்ளோம்
தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு வெளியிலான விவகாரங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என கோரியதாகவும் அந்த கட்சியின் செயலாளருமான சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நடைபெற்ற சிறப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே காரியவசம் இந்த தகவல்களை கூறியுள்ளார்.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
