உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவரொட்டிகள் பயன்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய சந்தர்ப்பங்கள் தவிர சுவரொட்டிகள் பயன்படுத்தப்படாது.
வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், செய்தித்தாள் மூலம் தகவல்களை விநியோகித்தல், பொதுக் கூட்டங்கள் மற்றும் தன்னார்வப் பணிகள் மூலம் தேவையான விளம்பரம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்டுவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |