தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம்: கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தீர்மானம்
தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் எதிர்வரும் 6ஆம் திகதியும் இந்த தெளிவூட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய தேர்தலுக்காக செலவிடப்படும் நிதி மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

உரிய தெளிவுப்படுத்தல்
எவ்வாறாயினும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், இதுவரை எந்தவொரு தேர்தலும் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு உரிய தெளிவுப்படுத்தலை வழங்கும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri