தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலோ வாக்குச் சாவடிகள் மட்டத்திலோ திறந்துள்ள அலுவலகங்களிலும் 60 அடி கொண்ட பேனர் தவிர்த்து வேறு எந்த அலங்காரம், போஸ்டர்களும் காட்சிப்படுத்த முடியாது.
தடை
அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்களை காட்சிப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு அபேட்சகர் அல்லது ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam