முட்டை விலை அதிகரிப்பு! பண்டிகைக் காலத்தில் சிக்கல் ஏற்படலாம்
நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரியமையளார்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முட்டை விலை அதிகரித்துள்ளமையால், பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தலையிட வேண்டும்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால் வர்த்தகர்கள் முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்.
இல்லையெனில் பண்டிகைக் காலத்தில் ஒரு கேக் துண்டைக்கூட உண்ண முடியாத நிலை ஏற்படும். ஆகவே, நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் முட்டை விலை தொடர்பில் உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri