யாழில் 75 வருட பாரம்பரியத்தை கொண்ட கல்லூரியின் மோசமான நிலை(Video)
தமிழர் தாயகப் பகுதியை பொறுத்தவரையில் கல்வி என்பது எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி படிகளுக்கான முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளையும் தொழில் வல்லுனர்களையும் நம் தேசத்து கல்வி உருவாக்கியுள்ளது.
எனினும் நம் நாட்டில் காணப்படும் பொருளாதார அசமந்த நிலைகளினாலும், அரசியல் சூட்சுமங்களினாலும் கல்வி நிலையானது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறு பல்லாயிரம் பட்டதாரிகளை நம் தேசத்திற்கும், உலகிற்கும் வருடா வருடம் அறிமுகம் செய்யும் யாழ் தொழிநுட்பக் கல்லூரியின் தற்போதைய நிலையானது கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள குறித்த கல்லூரியானது பாரம்பரியம் நிறைந்ததும் 75 வருடங்களை தாண்டி இயங்க கூடியதுமான ஒரு கல்லூரியாகும்.
எவ்வித வளர்ச்சிப்படிகளை காணாமலும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும், எவ்வித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இயங்கிவருகிறது.
இவ்வாறு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் யாழ். தொழிநுட்பக்கல்லூரியின் அடிப்படை பிரச்சினைகளை குறித்த காணொளியூடாக நாமும் அறிந்துகொள்வோம்
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri