கோட்டா கோ ஹோம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரை யுத்தக்குற்றம் சார்ந்தது: அருட்தந்தை மா.சத்திவேல்

People Political Prisons Srilanka Economic Crisis Srilanka Protest
By Independent Writer Apr 20, 2022 08:08 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

'கோட்டா கோ ஹோம்' என்பது தெற்கின் மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்தது எனவும், இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது யுத்தக் குற்றம் சார்ந்தது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில்  இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,

'கோட்டா கோ ஹோம்' ( கோட்டா வீட்டுக்குச் செல்) தொனிப்பொருளில் காலிமுகத்திடலில் பத்து நாட்களைக் கடந்தும் போராட்டம் இரவு பகலாகத் தொடர்கின்றது.

இப்போராட்டத்தில் சிங்க கொடியை அசைத்தும், போர்த்துக் கொண்டும் இன,மத சகோதரத்துவம் பேசும் பெரும்பான்மை சமூகத்தார், அதற்கு மத்தியில் அதே சிங்கக் கொடியைக் கையில் தாங்கி கொண்டு நிற்கும் தமிழர்களையும், முஸ்லீம்களையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த சகோதரத்துவம் என்பது பெரும்பான்மை ஏனைய இனங்களைக் கரைத்துவிடும், அழித்துவிடும் தன்மை கொண்டது என்பதே உண்மை. காலிமுகத்திடலில் 'கோட்டா கோ ஹோம்' கிராமம் அமைக்கப்பட்டிருக்கும் அதே சூழ்நிலையில் ரணவிரு கம (இராணுவ வீரர்களின் கிராமம்) அமைக்கப்பட்டுள்ளது.

தேசியக்கொடியும் இராணுவ வீரர் கிராமமும் தமிழ் இன எதிர்ப்பு அடையாளமே. இவை இரண்டிற்கும் மத்தியில் தமிழர்கள் தேசியக் கொடியோடு நிற்பதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறனர்? எதனைக் கூற வருகின்றனர்? இன அழிப்பு வரலாறு தெரியாத இளம் தலைமுறையினர் இன ஒற்றுமை குறித்துப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.

இவர்களே அங்கு தமிழில் தேசிய கீதம் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்கு முரண்பட்டும் உள்ளார்.

இதுவே காலி முகத்திடலில் உண்மை முகம். காலிமுகத்திடலில் கொட்டகை அடித்து தொடர்ச்சியாகப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் ஒரு சில பௌத்த பிக்குகளையும் பெரும்பான்மையின பல்கலைக்கழக மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.

அவர்களிடம் வடக்கு, கிழக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பு பதாகை மற்றும் கோஷங்களுடன் கலந்து கொள்ள முடியுமா? என நான் கேட்டபோது ஏனைய குழுக்களோடும் கலந்துரையாடிவிட்டுக் கூறுகின்றோம் என்றனர்.

இதுவரைக்கும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இது காலிமுகத்திடலில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, நீதிக்கான கோரிக்கைகளுக்கு இடமில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

புதிய தலைமுறையும் இந்த நிலை என்றால் இவர்களால் உருவாக்கப் போவதாகக் கூறும் புதிய இலங்கையிலும் பழைய முகமே காணப்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனலாம். கோட்டா கோ ஹோம் என்பது தெற்கின் மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்தது அவருடைய வயிறு சார்ந்தது.

இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது அரசியல் சார்ந்தது யுத்தக் குற்றம் சார்ந்தது. அரசுக்குப் பணமுடை ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் நாம் வீதிக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என உணர்ந்த போதுதான் கோட்டா கோ ஹோம் கோஷம் எழுந்தது.

அது வரை கோட்டா யுத்த வீரனா, சிங்கள பௌத்த காவலன் என்பது இவர்களின் சிந்தனையாக இருந்தது. ஆனால் தமிழ் மக்கள் 'கோட்டா கோ ஹோம்' என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அத்தோடு பதவியில் அமர்வதற்குத் துணை நிற்கவும் இல்லை. தமிழர்கள் இவர் போர்க்குற்றவாளி, சர்வதேசமே போர்க்குற்ற விசாரணை நடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கப்படல் வேண்டும் என்றே கூறினர்.

ஆனால் தெற்கின் சிங்கள பௌத்த மதவாதத்தினால் போதையடைந்தவர்களுக்கு இக்குரல் கேட்கவில்லை. தற்போதும் கேட்பதற்கு ஆயத்தம் இல்லை எனவும் உணரலாம். தெற்கில் தற்போது நடைபெறும் போராட்டங்களிலும் போராட்ட வடிவங்களிலும் மட்டுமல்ல அதன் உந்து சக்தியாக உள்ளவர்களிடத்தும் வடக்கு, கிழக்கில் இதே ராஜபக்சக்கள் நடத்திய அழிவைப் பார்க்கத் தவறுகின்றனர். அல்லது பார்க்க மறுக்கின்றனர்.

இந்நிலை நீடிக்கும் வரை வடக்கும் தெற்கும் இணைய முடியாது. தமிழர்கள் தமது அரசியலுக்காகச் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளோடும் அவர்களின் கருத்தியலாளர்களும் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்தும் போராடுவர். சம காலத்தில் தெற்கின் போராட்டங்களுக்குச் சமமாக எமது போராட்டமும் தொடர்தல் வேண்டும். இது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வலுப்படுத்தும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US