பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம்! - நிபுணர்கள் குழு கோரிக்கை
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் குழு கோரியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு நிபுணர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நீண்ட கால் முடக்கம் அமுல்படுத்தப்பட்டது, இதன் காரணமாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது, எனினும் அது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், வைத்தியர்கள் நோயாளிகளின் நலனில் மிகுந்த கவனம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை குறித்து இரண்டு துறைகளில் நிபுணர்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
ஒரு குழு நாடு முடக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது, மற்றொரு குழு முடக்கம் தீர்வு அல்ல எனவும் ஏனெனில் நாடு மீண்டும் திறக்கும் நேரத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
ஊரடங்கு நாளாந்தம் ஊதியம் பெறுவோர் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
