எபோலா வைரஸ் அச்சுறுத்தல் : இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
எபோலா வைரஸுடன் தொடர்புடைய அபாயங்களை எதிர்கொள்வதற்கு இலங்கை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி டபரேரா தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து இன்று(01.06.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சகம் தேவையான ஆயத்தத் திட்டங்களையும் பயிற்சிகளையும் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகள்
அதன்படி, எபோலா நோய் பரவல் பதிவாகியுள்ள கொங்கோ, உகாண்டா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்காக ஒரு சிறப்பு கண்காணிப்பு செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக வரும் பயணிகளை சுகாதார அமைச்சகத்தின் தனிமைப்படுத்தல் பிரிவு கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொற்று நோயியல் பிரிவுக்குத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எபோலா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கும், தேவையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் தேசிய தொற்று நோய்கள் நிறுவன (IDH) மருத்துவமனையும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அந்த சிறப்பு மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 19 மணி நேரம் முன்
சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam